பீட்சா கடையில் திருட வந்தவனை பீட்சா கரண்டியால் ஓட ஓட விரட்டிய ஊழியர்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் லான்ஸ்டவுன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள Saint John pizza shopஇல் நுழைந்து காசாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருடனை அவர் பீட்சா எடுக்கும் கரண்டியால் ஓட ஓட விரட்டி தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தலையை மறைக்கும் வகையிலான உடை அணிந்த ஒரு மனிதன் தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டவாறே காசாளரை நெருங்குகிறான்.

உங்கள் தலையை மறைக்கும் மறைப்பை அகற்றுகிறீர்களா? என்று காசாளரான Terry கேட்க அந்த திருடன் “முடியாது” என்கிறான்.

அப்படியானால் கடையை விட்டு வெளியே போங்கள் என்று Terry மிக மரியாதையாக கூறுகிறார்.

திருடன் அந்த இடத்தை விட்டு நகர வில்லை. சட்டென்று பின்னோக்கி செல்கிறார் Terry .

என் கையில் ஆயுதம் இருக்கிறது என்கிறான் அந்தத் திருடன். முன்னோக்கி வந்த Terry என்னிடமும் ஆயுதம் இருக்கிறது என்கிறார். அவர் கையில் இப்போது பீட்சாவை ஓவனுக்குள் இருந்து எடுக்கும் பெரிய கரண்டி இருக்கிறது.

அதற்குள் திருடன் அங்கிருந்த மெஷினை ஏதோ செய்ய முயல, தன் கையிலிருந்த கரண்டியால் திருடனின் தோளில் ஒரே போடு போடுகிறார் காசாளர்.

அடி வாங்கியதில் ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் திருடன் சுதாரித்துக் கொண்டு ஓடத்தொடங்க அப்போதும் விடவில்லை Terry.

குறி பார்த்து திருடன் மீது மீண்டும் ஒரு அடி, திருடன் விழுந்தடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.

வைரலான இந்த வீடியோவை 24 மணி நேரத்திற்குள் 30,000 பேர் பார்த்து விட்டனர்.

அதே திருடன் ஒரே இரவில் மூன்று கடைகளில் திருட முயன்றதாகவும், சிறிது நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டு மறு நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் கடையின் மேலாளரான Galen Price தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers