நண்பர் துஷ்பிரயோகம் செய்ததை தைரியமாக நீதிமன்றத்தில் சொன்ன மாணவி: கிடைத்த பாராட்டு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உடன் படிக்கும் நண்பர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததை மாணவி நீதிமன்றத்தில் தைரியமாக கூறிய நிலையில் குற்றவாளிக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண் ஒருவருக்கு தற்போது 19 வயதாகும் நிலையில் அவருக்கு 17 வயதாக இருக்கும் போது உடன் படித்த கிறிஸ் டேவிட்சன் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் டேவிட்சன் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து டேவிட்சன் மீது மாணவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு ஹாலிபக்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டேவிட்சனுக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கிளன் மெக்டவுல் தீர்ப்பளித்துள்ளார்.

கிளின் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மனதில் பலத்தை கொண்டு தைரியமாக இரண்டாண்டுகள் இவ்வழக்கை சட்டப்படி சந்தித்து வந்தது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்