கனடிய அமைச்சரின் டர்பனை கழற்ற சொன்ன அமெரிக்கா

Report Print Deepthi Deepthi in கனடா

கனடாவில் அறிவியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் நவ்தீப் பெயின்ஸ் என்ற சீக்கியர் அமெரிக்காவுக்கு சென்றபோது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மிச்சிகன் தேசிய தலைவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்ட பின்னர், டொராண்டோவுக்கு திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது, Detroit's விமான நிலையத்தில் முதற்கட்ட சோதனையை முடித்த பின்னர் இரண்டாம் கட்ட சோதனைக்கு சென்றபோது, என்னுடைய டர்பனை கழற்றுமாறு பாதுகாவலர் கேட்டுக்கொண்டார்.

இதனால் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளான நான், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஊடுருவலாக இதனை கருதினேன்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, எனது நிலையை அவர்களிடம் எடுத்துக்கூறி, நான் ஒரு அமைச்சர் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

இதனைத்தொடர்ந்து, என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் மன்னிப்புகேட்டுக்கொண்டது என நவ்தீப் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அமைச்சர் நவ்தீப் தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers