திருமணம் செய்து கொள்ள விரும்பாத கனடியர்கள்: ஆய்வில் தகவல்

Report Print Balamanuvelan in கனடா

எந்த வயதினராக இருந்தாலும் கனடா நாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை, அதுமட்டுமின்றி திருமணம் தேவையற்றது என்று எண்ணும் மன நிலைமையில் அவர்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Angus Reid Institute என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கனடாவில் திருமணம் என்பது வெறும் ஒரு சடங்குபோல்தான் கருதப்படுவதாக தெரியவந்துள்ளது.

கலாச்சாரமும் திருமண அமைப்புகளும் ஒரு காலத்தில் திருமணம் என்னும் விடயத்தை பெரிதாக எண்ணியதுபோக தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளோ அதற்கு எதிராக இருக்கின்றன.

இளைஞர்களைவிட பெரியவர்கள் திருமணத்தை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றனர். திருமணமெல்லாம் இக்காலத்திற்கு பொருந்தாது என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

திருமணம் குறித்து கனடியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக 1,520 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இருவர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் என்னும் ஒரு விடயம் தேவை இல்லை என்று பாதிக்கும் மேலானோர் தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் காணப்படுவதைப் போலவே திருமணத்தைவிடவும் கல்வியும், வேலையுமே முக்கியமானவை என்னும் ஒரு மன நிலைமை மாறி வருவதை இந்த போக்கு காட்டுகிறது என எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers