கனடாவில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் இதய நோயால் இறக்கிறார்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்கள் அதிகளவு இறப்பதற்கு காரணமாக முதலிடத்தில் இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

TimeToSeeRed என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹார்ட் & ஸ்ட்ரோக் பவுண்டேசன் என்னும் தொண்டு நிறுவனம் இது குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இதில் நாட்டில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் இதய நோயால் இறக்கிறார் எனவும் ஆண்களை விட பெண்களே மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதோடு ஆண்டுக்கு 25000 பெண்கள் இதய நோயால் உயிரிழப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேசிய ஹார்ட் & ஸ்ட்ரோக் பவுண்டேசன் தலைவர் யுவிஸ் சவீ, இதய நோய் விடயத்தில் பெண்கள் விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறார்கள்.

புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிக்காதவர்களை விட மூன்று மடங்கு இதய நோயால் உயிரிழக்கிறார்கள்.

அதே போல பெண்கள் அதிகளவு மது அருந்துவதும் இதய நோய் வருவதற்கு காரணமாக உள்ளது.

பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளருக்கு மேல் நிச்சயம் குடிக்கக்கூடாது.

ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீதம் மூன்று தடவை நடைபயிற்சி செய்வதும், சரியான உடற்பயிற்சி செய்வதும் இதய நோயிலிருந்து தப்பிக்க உதவும் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers