கனடாவில் பல ஆயிரம் டொலர்களை சம்பாதிக்கும் 4 வயது சிறுவன்: ஆச்சரிய திறமை

Report Print Raju Raju in கனடா

கனடாவில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் தீட்டும் ஓவியங்கள் ஓவிய கண்காட்சியில் அதிக விலைக்கு விற்பனையாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புனே மாநிலத்தை சேர்ந்தவர் அத்வைத் கொலர்கர் (4). கொலர்கரின் குடும்பம் கடந்த 2016-ஆம் ஆண்டு கனடாவுக்கு இடம்பெயர்ந்தது.

இந்நிலையில் அபாரமாக ஓவியம் வரையும் திறமை கொண்ட கொலர்கர் அதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கிறான்.

கடந்த ஜனவரி மாதம் நியூ ப்ருன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் ஜான் ஓவிய மையத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில் கொலர்கர் முதல் முறையாக தனியாக தான் வரைந்த ஓவியங்களை வைத்தான்.

இதன்மூலம் செயிண்ட் ஜான் ஓவிய மையத்தில் கண்காட்சி நடத்திய மிக இளவயது ஓவியர் என்ற பெருமையை கொலர்கர் பெற்றான்.

கொலர்கரின் ஓவியங்களுக்கு Colour Blizzard என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் $2,000-க்கு மேல் அவன் ஓவியங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த மாதம் நியூரோர்க்கில் நடந்த ஓவிய கண்காட்சியிலும் கொலர்கரின் ஓவியங்கள் வைக்கப்பட்டன.

இது குறித்து கொலர்கரின் அம்மா சுருதி கூறுகையில், ஒரு வயதிலேயே ஓவிய பிரஷ்ஷை கொலர்கர் கையில் எடுத்துவிட்டான்.

அவனுக்கு கலவை மற்றும் வண்ண உணர்வு அப்போதே இயற்கையாக இருந்தது.

என் மகனின் வேலைக்கு சரியான அங்கிகாரம் கிடைப்பது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers