டொரண்டோவின் முக்கிய சாலைகள் தற்காலிக மூடல்: வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in கனடா

கனடாவின் டொரண்டோவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் சில சாலைகள் வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகளுக்காக நடத்தப்படும் Bum Run என்ற தொண்டு நிகழ்ச்சி குயின்ஸ் பார்க் பகுதியில் நடக்கவுள்ளது.

இதன் காரணமாக டொரண்டோ பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள சில பாதைகள் ஞாயிறு காலை மூடப்படும்.

அதே போல சீக்கியர்கள் புத்தாண்டு, கல்சா தின நிகழ்ச்சி கொண்டாட்டத்துக்காக யூனிவர்சிட்டி அவென்யூவில் உள்ள சிறிய சாலைகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 7 மணியிலிருந்து 10.30 மணி வரை Bum Run நிகழ்ச்சி காரணமாக படினா அவென்யூவிலிருந்து மேற்கு நோக்கும் சாலை, கல்லூரி தெருவிலிருந்து தெற்கில் உள்ள சாலை மற்றும் பேயி தெருவிலிருந்து கிழக்கே போகும் சாலை ஆகியவை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 9 மணியிலிருந்து 10.30 மணி வரை 5 அவென்யூ சாலை, 6 Bay சாலை மற்றும் 94 Wellesley ஆகிய வழியாக செல்லும் வாகனங்கள் குயின்ஸ் பார்க் மற்றும் டொரொன்டோ பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் திசை திருப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers