கனடாவில் பலரை நெகிழச் செய்த இலங்கை யுவதி

Report Print Vethu Vethu in கனடா
293Shares
293Shares
ibctamil.com

இலங்கையில் பிறந்து கனடா தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட யுவதி, பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Kacee Rhodes என்ற பெண்ணே இவ்வாறு பிறந்த நாடான இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

கனடா Calgary பகுதியில் வாழும் Kacee, இலங்கையில் தான் வாழ்ந்த குழந்தைகள் இல்லத்திற்காக பெரிய தொகை நிதியை சேர்த்து அதனை வழங்கியுள்ளார்.

தன்னை வாழ வைத்த பீட்டர் வீரசேகர சிறுவர் இல்லத்தின் கணக்கிற்கு பெரும் தொகை பணம் வழங்கியுள்ளார். அந்த பணத்தின் மூலம் இல்லத்தில் வளரும் பிள்ளைகளுக்கு உதவுமாறு சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு வரும் கனடா யுவதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இல்ல நிர்வாகத்தினால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு வந்தவுடன் அவருக்கு நன்றி செலுத்துவதற்காக இல்ல நிர்வாகி அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளார்.

Gail மற்றும் Mark Rhodes தம்பதியினால் Kacee 8 மாத குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டுள்ளார். Kacee 9 வயதாக இருக்கும் போது துரதிஷ்டவசமாக Gail உயிரிழந்து விட்டார்.

அதன் பின்னர் Mark பொறுப்பில் வளர்ந்த Kacee இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்துள்ளார். அத்துடன் Kacee திருமணம் செய்யவுள்ள துணையுடன் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்