தன்னலமற்ற ஒரு ஹீரோவாக கடந்து செல்லும் மனிதன்!

Report Print Mohana in கனடா

இதய இயக்கி துணையுடன் இயங்கும் நிலையில் உடலுறுப்புக்களை தானம் செய்யும் வாலிபன்!

சஸ்கற்சுவான்- ஹம்பொல்ற் புரொங்கொஸ் ஹாக்கி விளையாட்டாளரும் கொடிய விபத்தில் காயமுற்று இதய இணக்கியின் துணையுடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் லேத்பிரட்ஜை சேர்ந்த லோகன் பௌலெட் என்பவர் தனது உடலுறுப்புக்களை தேவையான ஆறு பேர்களிற்கு வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் ஏற்பட்ட கொடிய வாகன மோதலில் 15-பேர்கள் கொல்லப்பட்ட-பிந்திய தகவல்- விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

21வயதுடைய இந்த வாலிபனின் இதயம் சனிக்கிழமை இரவு வலுவானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போது இவரது உறுப்புக்கள் தானம் செய்ய சரியான பொருத்தமானவை என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

லோகன் 21வயதை அடைந்ததும் நன்கொடை அட்டையில் கையொப்பம் இட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.கடந்து செல்லும் போதும் ஒரு தன்னலமற்ற ஹீரோவாக செல்கின்றான்.

கொடூரமான இந்த விபத்து அனைத்து ஹாக்கி சமூகம் மட்டுமன்றி நாடு பூராகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers