கனடாவில் 15 பேருக்கு மர்மக்காய்ச்சல்: ஒரு குழந்தை பலி

Report Print Balamanuvelan in கனடா
183Shares

கனடாவில் Stoney First Nation Reserve பகுதியைச் சேர்ந்த 15 பேருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை பலியாகியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக Stoney First Nation Reserve பகுதிலுள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர மருத்துவ உதவி மையத்திற்கு அழைப்பு வந்தது.

ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவிக்குழுவினர் குழந்தைகளைப் பரிசோதித்ததில் ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

Stoney First Nation Reserve பகுதியைச் சேர்ந்த 15 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

அவர்களில் 10 பேர் சிறுவர்கள். நான்கு பெரியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இறப்பு மற்றும் உடல் நலக் குறைவிற்கான காரணங்களை அறிவதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ப்ளூ காய்ச்சல் போன்ற ஏதோ ஒரு நோய்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்