கனடாவில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு குளிர் நீடிக்கும்: சுற்றுச்சூழல் அமைச்சகம்

Report Print Kabilan in கனடா

கனடா மக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு, குளிர்ச்சியான சூழ்நிலையை தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கனடாவில் இன்னும் குளிர்காலம் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது வெப்பமயமான சூழலுக்கு மக்கள் காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

வின்னிபெக் நகரில், கடந்த செவ்வாய் அன்று -16 டிகிரி செல்சியஸ் என்றளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதே நிலைதான் கனடாவின் சதுப்பு நிலங்களிலும் நிலவுவதாகவும், பகல்வேளைகளில் 10 டிகிரி அளவிற்கு அங்கு குளிர் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு ஒண்டாரியோ, கியூபெக் மற்றும் நியூ புருன்ஸ்விக் ஆகிய நகரங்களில் பனிப்பொழிவு அதிகளவில் நிகழும் என சுற்றுச்சூழல் அமைச்சகமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இம்மாத இறுதியில் கனேடியர்கள் வசந்த காலத்தை வரவேற்க தயாராக இருப்பார்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்