பூமியிலேயே உணவை வீணாக்குவதில் முதலிடம் இவர்களுக்குத்தான்

Report Print Balamanuvelan in கனடா

பூமியிலேயே அதிகம் உணவை வீணாக்குபவர்கள் இவர்கள்தான் என்று சொல்லும் அளவிற்கு கனடா நாட்டவர்கள் உணவை வீணாக்குகிறார்கள் என்று சுற்றுச்சூழல் கூட்டுறவு கார்ப்பரேஷனுக்கான கமிஷன் தெரிவித்துள்ளது.

பண்ணையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு வருவதற்குள் ஒவ்வொரு கனடா நாட்டவரும் ஆண்டொன்றிற்கு சுமார் 400 கிலோ உணவை வீணாக்குவதாக அந்த கமிஷன் தெரிவித்துள்ளது.

வீணாக்கும் உணவின் அளவைக் குறைக்கும்படி சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றின் அறிக்கை கனடாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் சப்பிட்டு விட்டு மீதம் வைப்பதால் வீணாகும் உணவின் அளவும் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அது மட்டுமின்றி வீணாக்கப்படும் உணவிலிருந்து 21 மில்லியன் டன் பசுமை இல்ல வாயு உருவாகுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் எத்தனையோ நாடுகளில் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் இந்த அறிக்கை கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்