வாரம் $1,000 பணம், வாழ்நாள் முழுவதும்! 18 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு தான் வாங்கிய முதல் லாட்டரியிலேயே ஜாக்பாட் விழுந்துள்ளது.

Quebec மாகாணத்தை சேர்ந்தவர் சார்லி லகர்டி (18), இவர் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் கடந்த 14-ஆம் திகதி ஜாக்பாட் லாட்டரி சீட்டை வாங்கினார்.

இது தான் சார்லி வாங்கிய முதல் லாட்டரி சீட்டு என்ற நிலையில் அதில் அவருக்கு முதல் பரிசு விழுந்தது.

அதாவது 1 மில்லியன் டொலர்கள் மொத்தமாக அல்லது வாழ்நாள் முழுவதும் வாரம் 1,000 டொலர்களை சார்லி வாங்கி கொள்ளலாம் என லாட்டரி நிறுவனம் கூறியது.

வாரம் வரும்படி பணத்தை பெற்று கொண்டால் வரி கிடையாது என்பதை அறிந்த சார்லி அதன்படி பணத்தை பெற்று கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி மொண்றியலில் உள்ள லாட்டரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பரிசை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் சார்லி பெற்று கொண்டார்.

சார்லி கூறுகையில், இந்த பணத்தை என் கல்விக்கு மற்றும் பயணத்துக்காக செலவு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers