கனடாவில் 62 வயதான தாயை வெட்டி கொன்ற மகன்

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவில் 62 வயதான தாயைக் கோடரியால் 20 முறை வெட்டிக் கொன்ற மகனுக்கு விரைவில் சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மே 19ம் திகதி அன்று Richmond நகரில் உள்ள வீட்டில் 62 வயது மதிக்கத்தக்க Redelma Belisario சடலமாக மீட்கப்பட்டார்.

கோடாரியால் மிக கொடூரமாக 20 முறை தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில், 38 வயது மதிக்கத்தக்க மகன் Darwin Lescano குற்றவாளி என தெரியவந்தது.

மேலும் கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஓன்லைனில் கோடாரியை வாங்கியதும் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு BC நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர், கோடாரியில் இருந்து இறந்து போன தாய் மற்றும் குற்றவாளி மகனின் டிஎன்ஏ இருந்ததாக வாதாடினார்.

முடிவில் Darwin குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ள நிலையில், விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers