இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்: பொலிசில் சிக்கிய இருவர்

Report Print Athavan in கனடா

கடந்த வாரம் Blood Tribe reserve பகுதியில் நடந்த கொலையில் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 23-ம் திகதி இரவு Alta அருகே உள்ள Blood Tribe reserve பகுதியில் ரத்தக்காயங்களோடு உயிருக்கு போரடியவாறு இருந்த Rance Bearhat(26) என்பவரை பொலிஸார் பார்த்துள்ளனர்.

உடனடியாக காயம்பட்ட Rance Bearhat-யை மீட்டு பொலிஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாக Stanley Troy(36) மற்றும் Justin Chad(32) ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Lethbridge-ல் உள்ள Provincial Court of Alberta -வில் அடுத்தவாரம் இவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படுவார்கள், மேலும் இந்த கொலை குறித்து இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் ஊடகங்காளிடம் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்