கிரிக்கெட் மட்டையை சுழற்றிய கனடா பிரதமர்: சுற்றுலாவில் சுவாரஸ்யம்

Report Print Harishan in கனடா

குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை டெல்லி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

ஒருவார காலம் சுற்றுலா பயணமாக தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்தியா வந்த அவரை வரவேற்பதில் பிரதமர் மோடி உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் ஜஸ்டின்.

அதனை வெளிப்படுத்தும் வகையில், இன்று காலை டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு வருகைபுரிந்த அவர், கிரிக்கெட் மட்டையை சுழற்றிக்கொண்டே நடந்த காட்சி சுற்றி இருந்தவர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியது.

அவருடன் வந்திருந்த அவரது குழாந்தைகளுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைவர்கள் கபில் தேவ், அசாருதீன் போன்றவர்கள் பயிற்சி வழங்கினர்.

அவரின் அந்த செயல் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers