குற்றவாளியுடன் கனடா பிரதமர் மனைவி: வைரலாகும் பழைய படம்- நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in கனடா

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு அளிக்கப்பட இருக்கும் விருந்திற்கு கொலை முயற்சிக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவருக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1986ஆம் ஆண்டு Vancouver தீவில் இந்திய கேபினட் அமைச்சர் Malkiat Singh Sidhuஐ கொலை செய்ய முயற்சித்ததற்காக தண்டனை பெற்ற Jaspal Atwal என்பவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் கனடா, பிரித்தானியா அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தீவிரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்ட அமைப்பான International Sikh Youth Federation என்னும் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.

புதனன்று கனடா பிரதமர் சீக்கிய தீவிரவாதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்தியாவிற்கான கனடாவின் High Commissioner இந்த அழைப்பை அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

CBC News

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்த குறிப்பிட்ட நபர் கனடா பிரதமருடன் இந்தியா வந்துள்ள குழுவில் இடம்பெறவில்லை என்பதும் அவர் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தால் அழைக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். மேலும் இம்மாதிரியான சர்வதேச பயணங்களில் சிலர் தாங்களாகவே இணைந்து கொள்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி Atwalக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை ரத்து செய்யும் நடவடிக்கையில் High Commission ஈடுபட்டுள்ளது என்றும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் Surrey Centreஇன் MPயான Randeep Saraiதான் கனடா பிரதமர் பங்கேற்க உள்ள இந்திய விருந்தில் Atwalஇன் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று அவரது பெயரை High Commissionerஇடம் கொடுத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

Vancouverஇல் பிறந்த Sarai, கனடா பிரதமருடன் இந்தியா வந்துள்ள 14 MPக்களில் ஒருவராவார்.

செவ்வாயன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்கனவே பங்கு பெற்ற Atwal, கனடா பிரதமரின் மனைவியுடனும், Liberal cabinet minister Amarjeet Sohiயுடனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

CBC News

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers