முதன்முறையாக கனடாவில் அறிமுகமாகியுள்ள திட்டம்

Report Print Balamanuvelan in கனடா

முதல் முறையாக கனடாவில் The Known Traveller: Digital Identity என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இனி பயணிகள் ஏர்போர்ட்டில் நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டியிருக்காது.

தற்போது கனடாவும், நெதர்லாந்தும் இணைந்து தொடங்கியுள்ள இந்தத் திட்டம் 2020 வாக்கில் உலகமெங்கும் அமல்படுத்தப்படலாம்.

இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு முதலாவது டாவோசில் உலகப் பொருளாதார மாநாட்டில் வெளியானது.

2016இல் 1.2 பில்லியனாக இருந்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 2030 வாக்கில் 1.8 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விமானத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றிற்கு அதிக பாதுகாப்பு திட்டங்கள் தேவைப்படும்.

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே செயல்படும் Nexus என்னும் திட்டம் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தங்கள் பாதுகாப்புச் சோதனைகளை முடித்து எளிதில் பயணம் செய்ய உதவுகிறது.

அது போலவே The Known Traveller : Digital Identity என்னும் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் பாதுகாப்புச் சோதனை நேரம் குறையும், பயணம் எளிதாகும்.

அது என்ன The Known Traveller: Digital Identity திட்டம்?

இத்திட்டத்தின்படி பயணியின் முழுமையான விவரங்கள், பயணியின் கண் அடையாளம், கைரேகை முதல் அவரது பட்டப்படிப்பு, வங்கி அறிக்கைகள் மற்றும் vaccination records வரை பதிவு செய்யப்படும்.

பயணி தன் பயணத்திற்கு தயாராகும்போதே இந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டால் போதும் அவர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வைத்திருப்பார்கள்.

பயணி தாமதமின்றி விரைவாக விமானப் பயணத்தைத் தொடரலாம்.

Accenture என்னும் தொழில் நுட்ப நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த உதவி செய்கிறது. சேகரிக்கப்படும் தகவல்கள் பத்திரமாக வைக்கப்படும் என்றும், பயனாளிகள் தகவல்களை யாருடன் பகிர்ந்து கொள்வது, எப்போது பகிர்ந்து கொள்வது என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விமர்சககர்களிடம் இருந்து விமர்சனங்களும் வரத் தொடங்கி உள்ளன. இந்த திட்டம் பயணிகளிடையே ஒரு பிரிவினையை உண்டு பண்ணும் என்கிறார்கள் அவர்கள்.

அதாவது, இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பவர்கள் விரைவாக பயணிக்க, மற்றவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டிவரும், அவர்களுக்கு மோசமான சேவைகளே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த திட்டம் குறிப்பிட்ட, நம்பிக்கைக்குரிய சிலருக்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் ஒரே போல் செயல்படுத்தப்பட்டால் திட்டத்தின் நோக்கம் வெற்றியடையும் என்று Airports Council Internationalஇன் பாதுகாப்புத் துறை தலைவரான Nina Brooks தெரிவிக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்