கனடா பிரதமரின் பாதுகாவலர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

Report Print Balamanuvelan in கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பாதுகாவலர்கள் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவரும் காயமடைந்துள்ளனர்.

நேற்று Reagan Presidential Libraryயில் உரை நிகழ்த்திவிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது பாதுகாவலர் பயணம் செய்து கொண்டிருந்த பைக் மீது Toyota Highlander கார் ஒன்று எதிர்பாராமல் மோதியதில் மூவர் காயமடைந்தனர்.

காரை ஓட்டி வந்த பெண் திடீரென காரைத் திருப்பியதால் அது பாதுகாவலரின் பைக் மீது மோதியது.

காரை ஓட்டிய அந்தப் பெண்ணும், உடன் பயணித்த அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களது நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கார் மோதிய பாதுகாவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு பெரிய காயங்கள் எதுவுமில்லை.

விபத்தினால் பிரதமரின் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்