கணவருடன் விவாகரத்து: மது விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடிய மனைவி

Report Print Raju Raju in கனடா
271Shares
271Shares
lankasrimarket.com

கனடாவை சேர்ந்த பெண் தனக்கு விவாகரத்து ஆனதை தனது நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் நிகோல் நியிஸ்னர் (36), இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கும் நோக்கில் நிகோல் தனது விவாகரத்து நிகழ்வை பெரியளவில் கொண்டாடியுள்ளார்.

அதன்படி தனது தோழிகளுக்கு போன் செய்து அவர்கள் திருமணத்தன்று அணிந்த ஆடைகளை அணிந்து வர நிகோல் கோரினார்.

இதையடுத்து அவரின் தோழிகள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து நிகோல் வீட்டுக்கு வந்த நிலையில் நிகோலும் அதே ஆடையை அணிந்திருந்தார்.

பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி நடனமாடியும், மது அருந்தியும் உற்சாகமாக இருந்தார்கள்.

இதோடு புகைப்படம் எடுத்து கொண்டும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை பற்றியும் பேசி கொண்டார்கள்.

இது குறித்து நிகோல் கூறுகையில், விவாகரத்து என்பது வலி நிறைந்த விடயம் தான்.

ஆனால் இப்போது என் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்குகிறது, இதை கொண்டாட வேண்டும் என தோன்றியதால் கொண்டாடினேன்.

இணையத்தில் இது போல பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்தேன், அதை பார்த்தே இந்த ஐடியா எனக்கு தோன்றியது.

விவாகரத்து எனக்கு சோர்வை கொடுத்தாலும், நண்பர்களுடன் நடத்திய பார்ட்டி உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இனி என் வாழ்க்கையை சிறப்பாக மீண்டும் தொடங்குவேன், என் குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்