கனடாவில் கொள்ளையர்களை பிடிக்கும் போது நடந்த விபரீதம்: நான்கு பேர் படுகாயம்

Report Print Athavan in கனடா
242Shares
242Shares
lankasrimarket.com

கனடாவில் வங்கியில் கொல்லையடித்த கொல்லையர்களை பொலிசார் பிடிக்கும் போது, நடந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கனடாவின் VANCOUVER வங்கியில் கொல்லையடித்த நபர்களை பொலிஸ் துரத்தி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது எதிர்பாரவிதமாக கார் விபத்து ஏற்பட்டுள்ளதால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி Jason Doucette , காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய Doucette , 30 நிமிட இடைவெளியில் வெவ்வேறு இரண்டு வங்கிகளில் கொல்லை நடைபெற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பின்னர் திருடப்பட்ட Porsche Cayenne காரில் கொல்லையர்கள் தப்பிசெல்ல முயன்றனர்.

விரட்டிய போது Clark Drive மற்றும் East 1st Avenue சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். Porsche Cayenne காரை விரட்டி பிடித்த போது அதில் இருந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை கைது செய்துள்ளோம்” என்றார்.

விபத்தின் போது பொலிஸ் வாகனம் உட்பட நான்கு வாகனங்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்