கனடாவில் பள்ளிப் பேருந்து விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்

Report Print Athavan in கனடா
208Shares
208Shares
lankasrimarket.com

கனடாவில் Barrie -க்கு அருகில் உள்ள 26-ம் நெடுஞ்சாலையில் சுற்றுலா முடித்து வீடு திரும்பிய பள்ளி சிறுவர்கள் பேருந்து எதிரே வந்த மினி வேனில் மோதி விபத்தில் சிக்கியதில் 6 சிறுவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து Hamilton-ல் உள்ள St. Thomas More Catholic Secondary School சேர்ந்த 41 சிறுவர்கள் மற்றும் 3 இளைஞர்களுடன் Collingwood உள்ள Blue Mountain Resortல் இருந்து சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பியது.

வரும் வழியில் வெள்ளிகிழமை மதியம் north of the town of Stayner-ன் 26-ம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை அருகில் இருந்த Collingwood General and Marine Hospital-ல் மீட்பு குழுவினர் அனுமதித்தனர்.

ஆனால் அதிகம் பேர் பதிக்கப்படிருந்ததால் உடனடியாக விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு 5 ஹெலிகாப்டர்கள் விரைந்தன அதன் மூலம் பெரும்பாலான சிறுவர்கள் taranto-ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த 8 பேரில் 5 பேரை தான் எங்களால் காப்பாற்ற முடிந்தது என தீ அணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். மேலும் விபத்து சமயத்தில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது, அதுவே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

விபத்து குறித்து பொலிஸ் விசாரணை நடத்தி வருவதால் 26-ம் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்