25 ஆண்டுகளாக தனித்தீவில் வாழும் ஆச்சரிய தம்பதியினர்!

Report Print Kabilan in கனடா

கனடாவில் தனித்தீவு ஒன்றில் மிதக்கும் கோட்டையை அமைத்து, வயதான தம்பதியினர் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதியர் வெய்ன் ஆடம்ஸ்(66), கேத்ரின் கிங்(59). வெய்ன் ஆடம்ஸ் காவலர் மற்றும் ஓவியராக இருந்தவர். கேத்ரின் ஓவியர், நடன கலைஞர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

வான்கோவர் கடற்கரை பகுதியில் உள்ள தீவின் மையப்பகுதியில், 1992ஆம் ஆண்டு மிதக்கும் கோட்டையை வெய்ன் ஆடம்ஸ் அமைத்துள்ளார்.

முதலில் இந்த கோட்டை சாதாரணமாக தான் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தம்பதியர் அங்கேயே வசிக்க முடிவெடுத்ததால், இருவரும் இணைந்து கோட்டையை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைத்தனர்.

இந்த தீவில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதற்கு ஏற்றது போல கோட்டையானது உயர்த்தியும், தாழ்த்தியும் தானாக அமைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கோட்டையின் சிறப்பு அம்சமாகும்.

தங்களை காண வரும் விருந்தினர்களை உபசரிக்க, விருந்தினர் கூடாரம் ஒன்றையும் அமைத்தனர்.

மேலும், இந்த கோட்டையில் பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம், Studio, Solar ஆகியவற்றைக் கொண்டு 12 அறைகள் உள்ளன.

இந்த கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவில் எப்போது கோட்டை ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு துணையாக இந்த கோட்டையில் நாய்கள் உள்ளன.

ஆனால், எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமும் இவர்களிடம் இல்லை. இந்த தம்பதியினர், உணவுக்காக அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். மேலும், இருவரும் படகில் சென்று மீன்களை பிடித்து வந்து சமைக்கின்றனர்.

மழை பெய்யும் பொழுது அதனை சேமித்து வைத்து, குடிநீராக பயன்படுத்துகின்றனர். இவர்களின் பொழுதுபோக்கு ஓவியம் வரைவதல், விளையாடுதல் மற்றும் எழுதல் ஆகும்.

எப்போதும் மிதந்து கொண்டிருக்கும் இந்த கோட்டைக்கு, கோடைக்காலத்தில் இந்த தம்பதியினரின் நண்பர்கள் வருகை தருகின்றனர். மேலும், இவர்களின் வாழ்க்கைமுறையைக் காணவே ஏராளமான விருந்தினர்கள், இங்கு வருகை புரிகின்றனர்.

தங்களின் மரணம் வரை இங்கேயே வசிக்க வேண்டும் என்பதே, இவர்களின் ஆசை. எனினும், வாழ்க்கையைப் பற்றிய எந்த கவலையும் இன்றி, சிரித்த முகத்துடனே வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்