கனடாவில் உயிர்கொல்லி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள வீடு இல்லாதோருக்கான தங்குமிடத்தில் உயிர் கொல்லி காய்ச்சல் பரவியதில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.

டொரண்டோவில் அமைந்துள்ளது சீட்டன் ஹவுஸ், இது வீடில்லாதவர்கள் வசிப்பதற்காக அமைக்கப்பட்ட இடமாகும்.

இங்கு அதிகளவில் முதியவர்கள் தங்கியிருக்கும் நிலையில் 500-க்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன. இந்நிலையில் இங்கு வைரஸ் தொற்று காரணமாக திடீரென பரவிய காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலை டொரண்டோ பொது சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இணை மருத்துவர் அலிசன் கிறிஸ் கூறுகையில், காய்ச்சல் கடந்த ஞாயிறு பரவிய நிலையில், புதன்கிழமை அதனால் ஒருவர் இறந்துள்ளார்.

கட்டிடத்தின் நான்காவது மாடியில் அதிக காலமாக வசிப்பவர்கள் இருக்கும் நிலையில், அங்குள்ளவர்களுக்கு தான் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த உயிர் கொல்லி காய்ச்சல் குறித்த ஆராய்ச்சியை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள்

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது என கூறியுள்ளார்

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்