கனேடிய பிரதமரை சந்திக்க விரும்பும் சிறுவன்: என்ன காரணம் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in கனடா
283Shares

கனடாவின் மனிடோபா பகுதியில் குடியிருந்து வரும் Emad Mishko Tamo எனும் சிறுவன் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் மூன்று ஆண்டுகள் அவதிப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

இவனது ஆசை என்னவென்றால் கனடா நாட்டின் பிரதமரான Justin Trudeau-வை சந்தித்து பேச வேண்டும் என்பதே. இதன் அடிப்படையில் சமீபத்தில் தமது பேஸ்புக் பக்கத்தில் தனது வீடியோ காட்சி கோப்பை பதிவு செய்தான்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் என்னை போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அவதிபடுகிறார்கள். அவர்களை மீட்டுதருமாறும் என்னை சந்திப்பீர்களா? என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளான்.

கனடாவில் அகதிகளாக வாழும் மனிதர்களுக்கு புதியதோர் இல்லம் மற்றும் தேவைகளை அந்நாட்டு அரசு செய்துதருவது குறித்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவு செய்துள்ளான்.

தற்போது பள்ளியில் படிக்கும் இச்சிறுவன் தனது தாயின் அரவணைப்பில் இருந்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்