கனடாவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கும் மக்கள்

Report Print Balamanuvelan in கனடா

2015ஆம் ஆண்டு Reva Clavier இன் சகோதரரான Adrian துப்பாக்கியால் தன்னையே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

39 வயது Lewis, பொலிசார் தன்னைக் கொல்லும்படி திட்டமிட்டு, அதன்படி கையில் துப்பாக்கி வைத்திருப்பதுபோல் பாவனை செய்ய, பொலிசார் அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த இருவரும் சட்டப்படி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கின்றனர்.

இந்த இருவருமே மன நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் கைகளில் துப்பாக்கி இல்லாதிருந்தால் அவர்கள் ஒருவேளை உயிரோடிருந்திருக்கக்கூடும் என்று எண்ணுகின்றனர். இதற்காக இப்போது அவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

"சிலர் கையில் துப்பாக்கி இருக்கக்கூடாது” என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது மன நல பிரச்சினை உடையவர்களுக்கு துப்பாக்கி வழங்கக்கூடாது என்பது அவர்களின் வாதம்.

புள்ளிவிவரங்களின்படி கனடாவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. 2004இல் 136 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2014இல் 262 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers