பெண்ணால் கேலி கிண்டலுக்குள்ளான ஆண்: ஒரே ஒரு வீடியோவால் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்

Report Print Santhan in கனடா

கனடாவில் சீக்கியர் ஒருவரிடம் தலைப்பாகையை நீக்க சொன்ன பெண் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜஸ்விந்தர் சிங் தாலிவால், கனடாவில் பணிபுரிந்துவரும் இவர் தனது நண்பர்களுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் அமைப்பான ராயல் கனடியன் லீஜியன் மையத்திற்கு கடந்த 19-ஆம் திகதி சென்றுள்ளனர்.

ஆனால் அந்த மையத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அங்கு யாரும் தொப்பி அணிந்து செல்லக் கூடாது. மத ரீதியாக தலைப்பாகை அணிந்து செல்ல அனுமதி உண்டு.

இந்நிலையில் அங்கு சென்றிருந்த ஜஸ்விந்தர் சிங் தாலிவால் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருவர் இங்கு எல்லாம் தலைப்பாகை அணியக் கூடாது, நீக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு ஜஸ்விந்தர் சிங் தாலிவால் மறுத்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் கேலி செய்துள்ளனர்.

உடனடியாக ஜஸ்விந்தர் தன்னுடைய மொபைல் போனில் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.

அதன் பின் இதை அறிந்த மையத்தின் தலைவர் ஸ்டீபன் கல்லாண்ட், எங்கள் அமைப்பின் நிர்வாகம் சார்பில் ஜஸ்விந்தர் சிங்கிடம் மன்னிப்பு கேட்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்