பாகிஸ்தான் இளைஞரை மணந்து கொண்ட கனடிய பெண்: சுவாரசிய காதல் கதை

Report Print Raju Raju in கனடா

பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் இளைஞருடன் கனடிய பெண்ணுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கே சென்று காதலரை பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் அக்னீதா. இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த குய்சீர் அப்பாஸ் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

நட்பானது விரைவில் காதலாக மாற, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

அக்னீதாவிடம் அப்பாஸ் தான் தனது காதலை முதலில் வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அக்னீதாவிடம் அப்பாஸ் கோரியுள்ளார்.

இதை ஏற்று கொண்ட அக்னீதா பாகிஸ்தானுக்கு சென்று காதலரை திருமணம் செய்து கொண்டதோடு, இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.

இதையடுத்து தனது பெயரை ஆயிஷா என மாற்றி கொண்டுள்ளார். ஆயிஷா கூறுகையில், எல்லோரும் என்னை பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். நாட்டின் கலாச்சாரம் குறித்து அப்பாஸ் என்னிடம் முன்னர் கூறியிருந்தார்.

அவர் சொன்னது எல்லாம் உண்மை என உணர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.

அப்பாஸ் குடும்பத்தினரும் ஆயிஷாவை அன்பாக வரவேற்றுள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்