பிள்ளைகள் கண்முன்னே நடந்த துயர சம்பவம்: கனடாவில் தாயை கொன்றவருக்கு சிறை

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தாயை அடித்துக் கொன்ற இந்தியருக்கு 11 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Surrey நகரில் வசிக்கும் இந்தியர். Sukhvir Singh Badhesa, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் Badhesa தனது மனைவியை தனது பிள்ளைகள் கண்முன்னே USB கேபிளால் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.

இதைப்பார்த்த அவரது தாயார் மகனைத் தடுக்க முயல அவரையும் Badhesa அடித்திருக்கிறார்.

தாயின் தலை, நெஞ்சு மற்றும் அடிவயிற்றில் அடித்து உதைக்க, கீழே விழுந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

Badhesaவின் இரண்டு பிள்ளைகளும் இவ்வழக்கில் சாட்சியாக உள்ளனர்.

மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த Badhesa குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

சிறையிலடைக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த Badhesa, தான் நடந்ததை மறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளான்.

சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின் தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும், அதனால் அவர்கள் நடந்தவற்றை ஒருவேளை மறந்துவிடலாம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.

இத்தனைக்கும் பிறகு அவனது அன்பு மனைவியோ தான் இன்னும் அவனுடனேயே வாழ விரும்புவதாகவும் தனது மாமியாரின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு சென்று புனித நதியில் கரைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்