கனடா பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்ட பிரான்ஸ்

Report Print Balamanuvelan in கனடா
62Shares
62Shares
ibctamil.com

பிரான்சில் கடந்த 1980ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கனடா பேராசிரியரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lebanon நாட்டைப் பூர்வமாகக் கொண்ட கனடா நாட்டு பேராசிரியர் Hassan Diab, 1980ஆம் ஆண்டு, பாரிசிலுள்ள யூத தேவாலயம் ஒன்றின் முன் நடந்த குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட அவர் 2008ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு பிரான்சு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் மூன்றாண்டுகள் சிறையில் கழித்தார், இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர்.

தான் நிரபராதி என்று எப்போதும் கூறிவந்த Hassan Diab, குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது தான் Lebanonஇல் இருந்ததாகக் கூறுகிறார்.

இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பிரான்சு நாட்டு நீதிபதிகள் Hassan Diabஐ வெள்ளிக்கிழமை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Hassan Diabஐ விடுவிக்கும் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ள கனடாவின் சர்வதேச விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளர் Brittany Venhola Fletcher, அவர் எப்போது கனடா திரும்புவார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக பிரான்சு நாட்டு அரசு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்