மியான்மரின் அழகு! விமர்சனத்திற்குள்ளான பதிவு

Report Print Gokulan Gokulan in கனடா

இந்தோனேசியத் தூதரான Peter MacArthur, ட்விட்டரில் வெளியிட்ட மியான்மர் கடற்கரையின் ஒரு புகைப்படம் சர்ச்சைக்குள்ளானதால் அகற்றப்பட்டது.

மியான்மருக்கான கனடா தூதர் Karen MacArthur, இவரது கணவர் Peter MacArthur இந்தோனேசியத் தூதர்.

இவர்கள் இருவரும் விடுமுறைக்காக மியான்மர் கடற்கரை ஒன்றிற்குச் சென்றபோது Peter MacArthur ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார், அதில் மியான்மர் கடற்கரையை அழகு நிறம் கொண்ட அலைகளும், வெம்மையும் தூய்மையுமான நீந்துவதற்கேற்ற தெளிந்த நீரும் கொண்ட கடற்கரை என வர்ணித்திருந்தார்.

மியான்மர் கடற்கரையில் ரெக்கைன் இனத்தோருக்கும் ரோஹிங்கியா இனத்தவருக்குமிடையே நிகழ்ந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை அறிந்து உலகமே திடுக்கிட்டது.

இந்நிலையில் அதே மியான்மரிலுள்ள கடற்கரையைக் குறித்து Peter MacArthur வெளியிட்டுள்ள செய்தி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

தூதர்கள் மியான்மரில் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் எதுவும் இல்லை.

CTV செய்திகளின் லண்டன் செய்தியாளர் Daniele Hamamdijanக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் Global Affairs செய்தித் தொடர்பாளரான Brianne Maxwell, தூதர் ஜோடி விடுமுறைக்காக சென்றிருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அது ரெக்கைன் மாகாணத்தில் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரெக்கைன் மாகாணத்தில் படுபயங்கரமான தீ வைப்பு நிகழ்ச்சிகளும், கற்பழிப்புகளும் கூட்டம் கூட்டமாக கொலைகளும் நடந்தேறியது கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி சுமார் 646,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்