47 பேரின் உயிரை காப்பாற்றிய பெண்: குவியும் பாராட்டுகள்

Report Print Harishan in கனடா

கனடாவின் பிரதான நெடுஞ்சாலையில் ஏற்படவிருந்த பெரும் விபத்தில் இருந்து பேருந்தை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கனடாவின் சட்பெரியில் இருந்து 47 பயணிகளுடன் கிளம்பிய பேருந்து நெடுஞ்சாலை 401 வழியாக சென்றுள்ளது.

அப்போது திடீரென பேருந்தின் ஓட்டுநர் மயக்கம் அடைந்து பேருந்தின் ஸ்டியரிங்கில் சாய்ந்துள்ளார்.

இதனைக்கண்டு பேருந்தின் முன் பகுதியில் இருந்த பயணிகள் சிலர் கூச்சலிட்டுள்ளனர்.

அப்போது ஒரு பெண் தானாக முன்வந்து பேருந்தை சாலை ஓரத்திற்கு வலைத்துள்ளார்.

பெரும் வாகன நெரிசலில் சென்று கொண்டிருந்த போது அப்பெண் தைரியமாக செயல்பட்டு, பேருந்தில் பயணித்த 47 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் 60 வயது நபர் என்பதால் அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அந்த நபரை ஓட்டுநராக அனுமதித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்