27 ஆண்டுகளுக்கு பின் சொந்தபந்தங்களுடன் இணைந்த பெண்: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

Report Print Harishan in கனடா

கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல வருடங்கள் கழித்து தன் குடும்பத்தாருடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரேபியன் தீவு நாடான HAITI-இல் பிறந்த பெண் குழந்தை ஒன்று 1980-களின் தொடக்கத்தில் கனடாவில் உள்ள குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டது.

பிறந்த நான்கு நாட்களேயான குழந்தைக்கு Judith Craig Morency என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

தற்போது 27 வயதாகும் Judith Craig-க்கு தன்னுடைய பெற்றோர் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது.

இதற்காக 2007-ஆம் ஆண்டு தனது ஆவணப்படம் தயாரிக்கும் நண்பர் ஒருவருடன் இணைந்து HAITI நாட்டிற்கு சென்ற Judith, அங்குள்ள செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், ரெடியோக்கள் மூலமாக தன் நிலையை விளக்கியுள்ளார்.

அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் மீண்டும் கனடா நாட்டிற்கே திரும்பியுள்ளார்.

அந்த செய்திகள் வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

தாய்நாடான HAITI-க்கு திரும்பிய அப்பெண், தன்னுடன் பிறந்த 5 உடன்பிறப்புகளுடன் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்