கனடாவின் பெரும் பகுதிகளில் தொடரும் அதி தீவிர குளிர் எச்சரிக்கை

Report Print Mohana in கனடா

கதவிற்கு வெளியே செல்லும் போது ஆடைகளால் மூடி கட்டியவாறு செல்லவும் என கனடியர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

ரொறொன்ரோ மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்கள் ஆழமான உறைபனி நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி அதி தீவிர குளிர் கால நிலை திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை காணப்படும் என எச்சரித்துள்ளார். வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே இரட்டை இலக்கங்களில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் பலத்த காற்று காரணமாக பறக்கும் பனி பார்வை நிலையை குறைக்கலாம் என சாரதிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.

குடியிருப்பாளர்கள் கவனமாக நடக்குமாறும், தோல்களை நன்றாக மறைக்குமாறும், பருத்தி ஆடைகளிற்கு பதிலாக கம்பளி அல்லது செயற்கை ஆடைகளை அணியும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பாதிக்கப்படக்கூடிய குடும்பம், நண்பர்கள் மற்றும் அயலவர்களை கவனிக்குமாறும் மக்களை நகரம் வலியுறுத்துகின்றது.

ஒன்ராறியோவின் வடபகுதி மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் தொடர் குளிர் வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டாவின் பெரும் பகுதிகள், மனிரோபா, சஸ்கற்சுவான் மற்றும் கியுபெக் ஆகிய பகுதிகளில் குளிர்விக்கும் காற்றுடன் கூடி வெப்பநிலை -40 அல்லது இதற்கும் கீழாக வீழ்ச்சி அடையலாம் என எச்சரிக்கப்படுகின்றது.

நியு பவுன்லாந்தின் பெரும் பகுதிகள் மற்றும் லப்ரடோர் ஆகிய இடங்களிலும் காற்று மற்றும் பனிப்புயல் அத்துடன் பறக்கும் பனி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்