கனடா வீட்டில் சடலமாக கிடந்த இரண்டு சகோதரிகள்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறுமிகளான இரண்டு சகோதரிகள் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

நாட்டின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Chloe (6) மற்றும் Aubrey Berry (4) என்ற இரண்டு சகோதரிகள் சடலமாக பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.

அங்கு ஆண் ஒருவர் காயத்துடன் கிடந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுமிகள் இருவரும் தங்களது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்காக இதை பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்