கனடாவில் கடும் குளிருக்கு ஒருவர் மரணம்?

Report Print Harishan in கனடா

கனடாவில் பனியில் உறைந்து நபர் ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவின் கியூபெக் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் முகப்பில் கிறிஸ்துமஸ் திகதியன்று நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

பனியில் உறைந்து இருந்த அவரது உடலை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மரணம் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் இறந்த நபரின் பெயர் Réal Charron என்றும் அவரின் வயது 57 என்பதும் தெரியவந்துள்ளது.

அவரது உடல் கைப்பற்றப்பட்ட திங்கட்கிழமை முந்தைய திகதியன்று அப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்துள்ளது.

குறிப்பாக 10 டிகிரி செல்சியஸ் வரை சென்றதால் குறைவான வெப்பநிலை காரணமாக அந்த நபர் இருந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.

மேலும் அவரது மரணத்திற்கு பின்னால் வேறு ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கின்றதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபரின் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்