கனடாவில் நபரை கொடூரமாக தாக்கிவிட்டு இருவர் தப்பியோட்டம்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பார்க்கிங் ஊழியரை இரண்டு பேர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடிய நிலையில் பொலிசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

நாட்டின் டொரண்டோவில் உள்ள ஹர்பவுபிரண்ட் பகுதியில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கடந்த 9-ஆம் திகதி சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ஊழியரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் சிசிடிவி கமெராவில் பதிவான நிலையில் பொலிசார் அதை வெளியிட்டுள்ளனர்.

முதல் குற்றவாளியின் வயது 30லிருந்து 35 வரை இருக்கும் எனவும் அவர் ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றவாளி குண்டாக இருந்ததோடு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான தொப்பி அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுடன் பெண்ணொருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்