ரொறொன்ரோ பெரும்பாகம், யோர்க் பிராந்தியம் மற்றும் டர்ஹாம் பிரதேசம் ஆகிய பகுதிகளிற்கு குளிர்கால வானிலை பயண எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் ஆரம்பிக்கும் பனி பொழிவு பெரும்பாலான பகுதிகளில் உறை பனி மழை நிலைக்கு மாறும் என கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பனிக்கட்டி நிலை சில வீதிகளில் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியத்திற்கு பின்னர் வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் உயர்வதுடன் மழைத்தூறலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக பனிபடர்ந்த நிலை காணப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் உப்பு லாரிகள் காணப்படுவதாக ரொறொன்ரோ நகரம் தெரிவிக்கின்றது.
ரொறொன்ரோவில் வெப்பநிலை இன்று 3 C ஆக காணப்படும்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பனி அல்லது மழை வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இரு நாட்களிலும் உறை பனி நிலையை விட உயர்ந்து காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.