செல்வாக்குள்ள நபர்கள் பட்டியலில் இடம்பிடித்த கனடிய பிரதமர்

Report Print Deepthi Deepthi in கனடா
101Shares

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2017 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

LinkedIn Corporation மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில், கனடிய பிரதமர் , அன்றாடம் கனடியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்த உரையாடல்கள் மற்றும் அவரது நாட்டின் கொள்கைகள், பொருளாதாரம் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டதன் மூலம் அதிக மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

மேலும், சமூகவலைதளங்களிலும் இவர் தனது நாட்டின் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்துகொண்டதால் அதிக ஷேர்கள், பின்தொடர்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

இதன் காரணமாகவே இவர் 2017 ஆம் ஆண்டில் செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் அதிகம் இடம் பிடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் செல்வாக்குள்ளவர்களின் பட்டியல்

  1. Ian Bremmer | President & Founder of Eurasia Group and GZero Media
  2. Justin Trudeau | Prime Minister of Canada
  3. Mohamed El-Erian | Chief Economic Advisor of Allianz
  4. Liz Ryan | Founder & CEO of Human Workplace
  5. Sallie Krawcheck | Co-founder and CEO of Ellevest
  6. Naomi Simson | Founder of Red Balloon
  7. Adam Grant | Organizational Psychologist at The Wharton School
  8. Sanyin Siang | Executive Director of Fuqua
  9. Beth Comstock | Vice Chair of GE
  10. Nicholas Thompson | Editor in Chief of Wired Magazine

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்