பருவகாலத்தின் பாரிய பனிப்பொழிவு: சாரதிகளை எச்சரிக்கும் பொலிசார்

Report Print Mohana in கனடா

ரொறொன்ரோ பெரும்பாகம் பருவகாலத்தின் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவை எதிர்நோக்கியுள்ளதால் சாரதிகளை பொலிசார் எச்சரிக்கின்றனர். பனிப்பொழிவு செவ்வாய்கிழமை காலையும் தொடர்கின்றது.

திங்கள்கிழமை இரவு பல வாகன விபத்துக்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலை போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.

விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் வாகன சாரதிகளை வேகத்தை குறைத்து மெதுவாக போகுமாறு பொலிசார் எச்சரிக்கின்றனர்.

பல கனரக வாகனங்கள் மற்றும் தனிவாகன விபத்துக்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை பல பாடசாலை பேரூந்துகள் ரத்து செய்யப்பட்டன.

ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோவின் தென்பகுதியின் பல பாகங்கள் ஒரு விசேட வானிலை அறிக்கையின் கீழ் உள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளதுடன் கடந்த இரவு எட்டு முதல் 10-சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பனிபுயலாக மாறுவதற்கு முன்னதாக மேலதிகமாக ஐந்து சென்ரிமீற்றர்கள் பனி பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகரின் பல பாகங்களிலும் வெவ்வேறு அளவிலான பனிப்பொழிவு காணப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்