கனடாவில் காணாமல் போன நாய்: ஐந்து மாதம் கழித்து நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in கனடா

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன நாய் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஐந்து மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிராங்கி என்ற நாயை வளர்த்து வந்தார்.

பெண்ணிக்கு கடந்த யூலை மாதம் உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் பிராங்கியை தனது நண்பரிடம் கொடுத்து சில காலம் பராமரிக்க சொன்னார்.

இதையடுத்து மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் நகருக்கு பெண்ணின் நண்பர் நாயை அழைத்து சென்ற போது அது அவரிடமிருந்து தப்பித்து சென்றுள்ளது.

இந்நிலையில் பிராங்கி நாய் கடந்த மாதம் 27ஆம் திகதி ஸ்காட் ஸ்டீவன் என்ற லொறி ஓட்டுனர் கண்ணில் பட்டுள்ளது.

நாயை எடுத்து தன்னுடனே ஸ்டீவன் வைத்து கொண்டுள்ளார், தனது லொறியில் அதற்கு படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர் மாகாணத்தில் உள்ள ஒரு விலங்குகள் பாதுகாப்பு சங்கத்துக்கு பிராங்கியை கொண்டு சென்று ஸ்டீவன் விட்டுள்ளார்.

தற்போது குறித்த விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜேன் நெல்சன் நாயின் உரிமையாளரை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்துள்ளார்.

நாயானது விரைவில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது, காணாமல் போன நாய் தன்னிடம் பாதுகாப்பாக வந்தது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த ஒரு அற்புதமாக பார்ப்பதாக நெல்சன் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்