குழந்தையை கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு!

Report Print Dias Dias in கனடா
92Shares

ரொறன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் குழந்தையை கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேக நபரின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், சுமார் ஐந்து அடி ஏழு அங்குல உயரமுள்ள அவர் சுமார் 130 இறாத்தல் எடை கொண்டவராக இருப்பார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.50 அளவில், யங் வீதி மற்றும் லோரன்ஸ் அவனியூ ஈஸற் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அது குறித்த காணொளிப் பதிவினையும் வெளியிட்டுள்ளனர்.

29 வயதான பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையுடன் நின்றிருந்த வேளையில், அவரை அணுகிய இனந்தெரியாத பெண், தாயாரின் கையிலிருந்து குழந்தையை பறித்துக் கொண்டு தப்பியோட முனைந்ததாகவும் காப்பாற்ற முயன்ற தயாரை கடுமையாக தாக்கி பின்னர் தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்