இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரிலேயே கனடா தூதரகம் தொடர்ந்து செயல்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இதற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ளன. இந்நிலையில் தலைநகர் மாற்றம் காரணமாக இஸ்ரேலில் செயல்பாடும் கனடிய தூதரகம் இடம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இஸ்ரேலின் டெல் அவிங் நகரில் அமைந்துள்ள கனடிய தூதரகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட மாட்டாது.
அதே இடத்தில் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.