15000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை கனடாவில் கண்டுபிடிப்பு

Report Print Kabilan in கனடா
226Shares
226Shares
ibctamil.com

கனடாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பெரிய குகையை சாகச குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

கனடாவின் Montreal நகருக்கு கீழே, பாதாள குகை ஒன்றை சாகச பயணங்கள் மேற்கொள்ளும் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இந்த குகையினுள் நீண்ட ஏரி ஒன்றும் செல்கிறது.

ஆனால், இந்த ஏரி எங்கு சென்று முடிகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

CBC என்னும் சாகச பயணக்குழு, இது போன்ற பயணங்கள் மேற்கொள்வதை ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அவ்வாறு, கனடாவின் Montreal நகரின் பாதாளத்தில் அவர் ஒரு பயணம் மேற்கொண்டபோதே

இந்த குகையை கண்டுபிடித்துள்ளனர். இந்த குகை சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பனியுகத்தின் போது உருவாகியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குகையானது, குறைந்தபட்சமாக 200 மீட்டர் நீளமும், ஆறு மீட்டர் உயரமும் மற்றும் மூன்று மீட்டர் அகலமும் உடையதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த குகையின் ஒரு முக்கிய பகுதியினை, பல ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் தான் திறந்துள்ளனர். எனினும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கே இப்படி ஒரு குகை இருப்பது இதுவரை தெரியாமல் இருந்துள்ளது.

தங்களின் வாழ்விலேயே ஒருமுறை நிகழும் நிகழ்வு இது எனவும், தாங்கள் கண்டுபிடித்ததிலேயே இதுதான் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என அந்த குழுவில் ஒருவரான லீ பிளான்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அறை போன்ற அமைப்புடைய இந்த குகை, மிக நீண்ட தூரம் சென்று நீர்தேக்கம் ஒன்றை அடைகிறது. மேலும், குகையினுள் இருந்த சுண்ணாம்பு சுவற்றினில் சன்னல் அளவிற்கு துளையிட்டு உள்ளே சென்றோம்.

அதன் பிறகு, குகையின் நீளம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த குகையின் முடிவுப் பகுதியை காண மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

முழு குகையின் நீளமும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கு குகையின் உள்ளே செல்ல அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்