நிலச்சரிவினால் Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது

Report Print Mohana in கனடா

கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹோப்பிற்கு அருகாமையில் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவினால் வாகனங்கள் பல சரிவிற்குள் அகப்பட்டுள்ளதுடன் நெடுஞ்சாலை 1ம் வியாழக்கிழமை மூடப்பட்டுள்ளது.

நடு இரவிற்கு சிறிது பின்னர் இரண்டு டிரக் ட்ரெயிலர் மற்றும் வாகனம் ஒன்றில் பயணித்த பயணிகள் மற்றும் சாரதிகள் நிலச்சரிவிற்குள் அகப்பட்டு கொண்டதாகவும் ஆனால் எவரும் காயமடையவில்லை எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

டிரான்ஸ் கனடா பாதையில் பல இடங்களில் கிட்டத்தட்ட 120கிலோ மீற்றர்கள் வரை சேறு மற்றும் குப்பைகள் வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்