ரொறொன்ரோவின் புதுவரவாளர் ஆலோசகராக கவுன்சிலர் நீதன் ஷான்!

Report Print Mohana in கனடா

ரொறொன்ரோ நகர சபை கவுன்சிலர் நீதன் ஷானை நகரத்தின் புது வரவாளர்களின் ஆலோசகராக நியமித்துள்ளது.

பிப்ரவரியில் றுயசன-42 ஸ்காபுரோ-றூஜ்ரிவர் தொகுதியில் இடம்பெற்ற இடை தேர்தலில் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார்.இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபையின் ஒரு அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டார்.

இடைத்தேர்தலை தொடர்ந்து நகரின் இளைஞர் கவுன்சிலராகவும் நியமனம் பெற்றவர் தற்போது உலக நாடுகளிலிருந்து வந்து ரொறொன்ரோவை தங்கள் வீடாக கருதும் ஆயிரக்கணக்கான புது வரவாளர்களின் பிரதிநிதியாகவும் நிமனம் பெற்றுள்ளார்.

ஷான், தற்போது ரொறொன்ரோ வாசிகளிற்கு வழங்கப்படும் சகல நகர சேவைகளையும் குடிவரவு மற்றும் அகதி சமூகத்தினருக்கும் கிடைக்க உறுதியளிப்பதென தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.

புது வரவாளர்களுடன் இரு தசாப்பதங்களாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். இளைஞர் தொண்டராகவும், ஆசரியர், அகதி மற்றும் குடிவரவு கொள்கை ஆலோசகர் மற்றும் இனவாத எதிர்ப்பு கல்வியாளராகவும் பணிபுரிந்;துள்ளார்.

நகரின் புது வரவாளர் ஆலோசகராக முன்னர் கவுன்சிலர் Joe Mihevc இருந்தார் இவர் வறுமை குறைப்பு ஆலோசகர் பதவிக்காக இப்பதவியிலிருந்து விலகினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்