15 வருடகால சுரங்கப்பாதை பாவனைக்கு வந்தது! – மகிழ்ச்சியில் கனடா மக்கள்

Report Print Samaran Samaran in கனடா

நீண்ட காலமாக அமைக்கப்பட்டு வந்த கனடா – ரொறொன்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யோர்க் ஸ்பாடினா சுரங்கப்பாதையானது எதிர்வரும் 30 நாட்களுக்குள் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த சுரங்கப்பாதையானது சுமார் 15 வருடகாலத்திற்கும் அதிகமாக திர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இது வரையிலும் அதனை பாவனைக்கு விடுவது தொடர்பில் அரசு எந்த அறிவித்தலையும் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் குறித்த சுரங்கப்பாதையில் திறப்பு நேரக்கணிப்பினை, கனடாவின் அரசு உயர் அதிகாரிகள் குழு தொடக்கி வைத்துள்ளது.

அதன்படி முற்றிலுமாக நிறைவு செய்யப்பட்ட குறித்த சுரங்கப் பாதையில் 6 புதிய இரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யோர்க் ஸ்பாடினா சுரங்கப்பாதையானது ஆரம்பத்தில் 2.6 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும், தற்போது வரையிலும் அதன் நிர்மாணிப்பு பணிகளுக்காக 3 பில்லியன்களுக்கும் அதிகமான டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 15 வருடங்கள் இழுபறியாகியிருந்த சுரங்கப்பாதை தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதனால் குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்