மலையேற்ற வீராங்கணையின் உயிரைப் பறித்த ஒன்லைன் மருந்து

Report Print Kabilan in கனடா

ஒன்லைன் மூலமாக மருந்து வாங்கி உட்கொண்ட, கனடாவைச் சேர்ந்த Abbey Gail Amisola என்னும் மலையேற்ற பயிற்சி ஆசிரியை தனது தோழியுடன் விடுதி அறையில் இறந்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கணையான Abbey Gail Amisola, சமீபத்தில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, கம்போடியாவில் மலையேற்றப் பயிற்சி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

கம்போடியாவில் உள்ள ஒரு விடுதியில் தனது தோழி Natalie Jade Seymour-யுடன் தங்கியுள்ளார். அவர்களுக்கு உணவு நச்சுத்தன்மை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

அதனால் ஒன்லைன் மூலமாக மருந்து தேடிய அவர்கள், குறிப்பிட்ட மருந்தினை மருந்தகத்தில் வாங்கி உட்கொண்டுள்ளனர். மறுநாள் இருவரும் விடுதி அறையிலேயே இறந்துள்ளனர்.

இதுகுறித்து, கம்போடியாவின் வின்னிபெக் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Abbey Gail Amisola-யின் தோழியான சமந்தா கூறுகையில், அப்பெய்க்கு பயணம் மேற்கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். உலகம் முழுவதும் பயணம் செய்வதே அவரின் ஆசையாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...