கனடிய மக்கள் பணபரிவர்த்தனைகளுக்கு அதிகம் விரும்புவது இதை தான்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பரிவர்த்தனைகளுக்கு மக்கள், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை விட அதிகளவில் பணத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

2015-ஆம் வருடத்துக்கான சர்வே முடிவுகளை கனடா வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 51 சதவீதம் பேர் கனடாவில் பணபரிவர்த்தனைகளை தான் செய்ய விரும்புகிறார்கள்.

31 சதவீதம் பேர் டெபிட் கார்டு, 19 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.

சிறிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணம் அதிகமாக தரப்படுகிறது. நடுத்தர மதிப்பு பரிமாற்றங்களுங்கு டெபிட் கார்டுகளும், பெரிய மதிப்பிலான பரிமாற்றங்களுக்கு கிரெடிட் கார்டுகளும் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த டொலர் மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் கிரெடிட் கார்டு மூலமே கட்டணங்கள் செலுத்த அதிக மக்கள் விரும்புகிறார்கள்.

வெகுமதி புள்ளிகளுக்காகவே கிரெடிட் கார்டுகள் கனடாவில் பிரபலமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

வியாபாரிகளை பொருத்தவரையில் கடந்த 2015-ல் சராசரி பண பரிவர்த்தனைகள் $8.04-ஆகவும், டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் $28.33-ஆகவும், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் $43.85-ஆகவும் இருந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...