பிரசவ திகதி தெரியாமல் இருக்கும் கர்ப்பிணி

Report Print Deepthi Deepthi in கனடா

கனடாவில் பெண்மணி ஒருவர் தான் கருவுற்று பாதி மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் தனக்கு குழந்தை பிறக்கும் திகதி தெரியாது என்று கூறியுள்ளார்.

Nova Scotia தீவுப்பகுதியில் உள்ள Cape Breton என்ற கிராமத்தில் DeJong என்பவர் தனது மனைவி Kirsten- உடன் வசித்து வருகிறார்.

Cape Breton கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் கிடையாத காரணத்தால், இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று குடும்ப மருத்துவர்களை வைத்திருப்பது இயலாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இங்கு வசித்து வரும் Kirsten கர்ப்பமாக இருக்கிறார்.

தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மகப்பேறு மருத்துவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் தன்னால் முடியவில்லை என Kirsten கூறியுள்ளார்.

மேற்கொண்டு அவர் கூறியதாவது, எனது வயிறு நாட்கள் செல்ல பெரிதாகி கொண்டே சென்றது, அதன்பின்னர் சில வீட்டு குறிப்புகள் மூலம் எனது கர்ப்பத்தை உறுதி செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

கணவர் DeJong கூறியதாவது, ஒன்றாரியோவில் வசித்த நாங்கள் எனது வேலை நிமித்தம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கு குடிபெயர்ந்தோம். அங்கு கிடைத்த மருத்துவ வசதிகள் இங்கு எங்களுக்கு கிடைக்கவில்லை.

குடும்ப மருத்துவர் வேண்டும் என்பதற்காக Nova Scotia Health Authority- ஐ தொடர்பு கொண்டோம், ஆனால் எங்கள் பெயர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Antigonish செவிலியர்களை தொடர்பு கொள்ள எனது மனைவி முயற்சி செய்தார்.

ஆனால், அங்கு இருப்பவர்கள் யாரும் எனது மனைவியை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில், அங்கு பணியாற்றிய ஓய்வுபெற்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளியேறிய காரணத்தால் தற்போது பணியாற்றி அனைத்து மருத்துவர்களும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்.

எனது மனைவி பிரசவம் தொடர்பாக சுமார் 40 மருத்துவர்களை தொடர்பு கொண்டோம், ஆனால் அனைவருமே தங்களிடம் தற்போதைக்கு மருத்துவ அறைகள் காலியாக இல்லை என்று கூறிவிட்டனர்.

இறுதியாக Baddeck- இல் உள்ள Victoria County Memorial மருத்துவமனையில் அனுமதி கிடைத்துள்ளது, நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எனது மனைவியின் நிலை குறித்து கவலையாக உள்ளது என்றும், கனடாவில் இதுபோன்ற கிராமப்புற பகுதியில் வசிப்பது என்பது கடினமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்